இந்தியாவிலிருந்து படகுவழியாக வருபவர்களை தடைசெய்ய கடும் நடவடிக்கை
india
sea
sarath weerasekara
parliament
By Sumithiran
இந்தியாவிலிருந்து கடல்வழியாக சட்டவிரோதமாக இலங்கைக்கு வருவதை தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது அவர் இதனை தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் படகு மூலம் இலங்கைக்கு வருகை தருகின்றனர். அதை தடுக்கும் வகையில் கடற்படையின் விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னாரிலிருந்து வடக்கு, கிழக்கு கடற்பகுதி வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
11 படகுகள் நேற்று கைப்பற்றப்பட்டன.அந்த படகுகளில் வருகை தந்த 88 பேர் இந்திய கடற்படையினரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி