விடுதலைப்புலிகள் தொடர்பில் புகழ்ந்து பேசினால் கடும் தண்டனை! வருகிறது சட்டம்
இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் அந்த அமைப்பு தொடர்பாகவோ அல்லது அதன் தலைவர் தொடர்பாகவோ நாடாளுமன்றில் பேசும் எம்பிக்களுக்கு எதிராக கடுமையான தண்டனையை விதிக்கும் வகையில் சட்டமொன்றை கொண்டு வர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப்புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் குறித்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபைக்குள் புகழாரம் சூட்டும் வகையில் பேசுவதாக தெரிவிக்கப்படும் நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜேர்மன் நாடாளுமன்றத்திற்குள் ஹிட்லர் தொடர்பில் கருத்துரைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை, இதற்கு சிறந்த உதாரணம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்களை கொலை செய்த பிரபாகரன் மற்றும் அவர் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து, உயரிய பீடமான நாடாளுமன்றத்திற்குள் சிலர் புகழாரம் சூட்டும் வகையில் கருத்து வெளியிடுகின்றமை கவலைக்குரிய விடயம் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.