அமைச்சர் சரத்வீரசேகரவிற்கு மட்டும் விதிவிலக்கா? சமுக வலைத்தளங்களில் கிண்டல்
நாடளாவிய ரீதியில் சட்டவிரோத மணல் அகழ்வு , காடழிப்பு மற்றும் மரக்கடத்தலை தடுக்கும் வகையில் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 16 அதிகாரிகள் அடங்கிய சிறப்பு படைப்பிரிவு நேற்று முன்தினம் நிறுவப்பட்டது.
எனினும் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு துறை அமைச்சர் சர்வீரசேகர முககவசம் அணியாமல் இருந்தமை சமுக வலைத்தளங்களில் பலரது கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.
முககவசம் அணியாமல் பொது இடங்களில் மக்கள் நிற்கும்போது அவர்களை குண்டு கட்டாக பொலிஸார் தூக்கிச் செல்லும் நிலையில் அமைச்சர் முககவசம் அணியாமல பொது நிகழ்வில் கலந்து கொண்டதாக சமுகவலைத்தளங்களில் ஏளனம் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியான சுகாதார வழிகாட்டல்களின்படி , கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு எதிராக கட்டுப்பாடுகள் இருக்கும்நிலையில் அவ்வாறு நிகழ்வுகளில் கலந்து கொண்டால் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
