சிங்கள மக்களின் பேரெழுச்சியை எவரும் தடுக்க முடியாது - சூளுரைக்கும் இனவாதி!
"குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட வடக்கில் பௌத்த – சிங்களவர்களுக்கு எதிராக திரும்பியுள்ள அத்தனை விடயங்களுக்கும் அதிபர் விரைந்து தீர்வு காணவேண்டும்.
இல்லையெனில் பௌத்த – சிங்கள மக்களின் பேரெழுச்சியை எவராலும் கட்டுப்படுத்த முடியாது."
இவ்வாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பதில்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்யவேண்டும் என சரத் வீரசேகர அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அவரது கருத்துக்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முடிந்தால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்து பாருங்கள் என சவால் விடுத்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் சரத் வீரசேகரவிடம் கேட்டபோது அவர் வழங்கிய பதில்,
"நாட்டின் அரசியலமைப்பு சட்டங்களை, நாடாளுமன்ற விதிமுறைகளை மீறி சண்டித்தனம் செய்வோர் கைது நிச்சயமாக கைது செய்யப்படுவார்கள். எம்மைக் கைது செய்யுங்கள் என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சவால் விடுவது முட்டாள்தனம்.
அவர்கள் நாடாளுமன்றத்தில் ஒன்றையும், ஊடகங்களுக்கு இன்னொன்றையும், மக்கள் முன்னிலையில் வேறு ஒன்றையும் பேசுகின்றார்கள்.
தமிழ் மக்களின் வாக்குகளால் பிரதிநிதிகளாகத் தெரிவான அவர்கள் அந்த மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யாது தங்கள் அரசியல் இருப்பை தக்க வைக்க இனவாதத்தையும், மதவாதத்தையும் கையில் எடுக்கின்றார்கள்.
ஒற்றையாட்சி நாடு

தமிழ் மக்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக்கும் நாடு முழுவதும் 24 மணி நேரமும் சுதந்திரமாக நடமாடுவதற்கு முழு உரிமை உண்டு.
ஆனால் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என தமிழர்கள் தம்பட்டம் அடித்துக்கொண்டிருப்பது அவர்களுக்குத்தான் பேராபத்தாக மாறிவிடும்.
இது ஒற்றையாட்சி நாடு, எனவே இதை உணர்ந்து தமிழ் மக்களும், தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் செயற்பட வேண்டும். கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு.
ஆனால் அதியுயர் சபைக்கும், பௌத்த, சிங்கள மக்களுக்கும் சவால் விடுக்கும் வகையில், அவர்களை கொதிப்படையச் செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்." இவ்வாறு சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 23 மணி நேரம் முன்