முறுக்குள்ள செய்தியாளர் சசி

Batticaloa Sri Lanka Sonnalum Kuttram
By Independent Writer Sep 04, 2023 05:13 AM GMT
Report
Courtesy: அ.நிக்ஸன்

கிழக்கு மாகாணச் சுயாதீனச் செய்தியாளர் சசி புண்ணியமூர்த்திக்கு, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டமை ஊடக சுதந்திரத்துக்கும் ஊடக ஜனநாயகத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள பாரிய எச்சரிக்கை.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டை சசி புண்ணியமூர்த்தியிடம் இல்லை என்ற ஒரு காரணத்தினால், அவர் ஊடகவியலாளர் அல்ல என்ற முடிவுக்கு வருவது மிகவும் அபத்தமானது.

அப்படியானால் அரசாங்கத் தகவல் திணைக்கள ஊடக அடையாள அட்டை இல்லாத ஏனைய செய்தியாளர்கள் சிலரை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்ள அனுமதித்திருக்கக் கூடாது.

ஆகவே சசி புண்ணியமூர்த்திக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறமை பட்டவர்த்தனமாகிறது எனக் கூறியிருக்கிறார் பத்திரிகையாளர் அ.நிக்ஸன்.

முறுக்குள்ள செய்தியாளர் சசி | Sasi Is A Twisted Reporter

04 - ஓகஸ்ட் -2023 அன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கிழக்கு மாகாண ஆளுநரை மிஸ்டர் ஆளுநர் (Mr. Governor) என்று சசி புண்ணியமூர்த்தி விளித்துக் கூறியதாலும், கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் தினேஸ் குணவர்த்தனவிடம் பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் பற்றிக் கேள்வி கேட்டமையினாலுமே, (31.08.2023) அன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

பிபிசி, அததெரன, ஐபிசி தமிழ் உள்ளிட்ட ஊடகங்களுக்கு சசி புண்ணியமூர்த்தி பல வருடங்கள் செய்தியாளராகக் கடமையாற்றி வருகிறார். அது எல்லோருக்கும் தெரியும்.

ஆகவே அவரை செய்தியாளர் அல்ல என்று குறிப்பிட்டு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குபற்ற அனுமதி மறுக்கப்பட்டமை ஒரு திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கையாகும்.

இலங்கை அரசியல் யாப்பில் நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபரை ஒரு செய்தியாளர் மிஸ்டர் பிறசிடன்ற் (Mr. President) என்று ஆங்கிலத்தில் அழைக்க முடியுமானால், மாகாண ஆளுநர் ஒருவரை மிஸ்டர் கவர்னர் என்று ஏன் அழைக்க முடியாது? அதிபர், பிரதமர், அமைச்சர்கள், ஆளுநர்கள், நீதிபதிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அதிகாரிகள் எவரையும், செய்தியாளர்கள் சேர் (Sir) என்றோ அல்லது மாண்புமிகு (Honorable) என்றோ அழைக்க வேண்டிய அவசியமே இல்லை.

மாறாக அவர்களின் பதவிக்கு முன்னால் மிஸ்டர் என்று விளித்துக் கூறினால் போதும். அந்தச் செய்தியாளரின் முறுக்கையும் (Proud) அது வெளிப்படுத்தும். ஆகவே மிஸ்டர் ஆளுநர் என்று சசி புண்ணியமூர்த்தி விளித்துக் கூறியமை தவறானது அல்ல.

முறுக்குள்ள செய்தியாளர் சசி | Sasi Is A Twisted Reporter

மிக எளிமையான முதுகெலும்புள்ள, முறுக்குள்ள ஊடகவியலாளர் என்றே, அவர் தன்னைப் பொது வெளியில் அடையாளப்படுத்தியிருக்கிறார். ஆகவே ஊடகவியலாளர்கள் குரல் கொடுக்க வேண்டும்.

அத்துடன் அரசாங்கத் தகவல் திணைக்கள அடையாள அட்டை வைத்திருப்போர் மாத்திரமே ஊடகவியலாளர் என்ற ஒரு விதியும் இல்லை. அந்த வார்த்தை மிக மிக ஆபத்தானது. நேர்மையான சுயாதீன ஊடகவியலாளர்கள் சிலர் அரசாங்கத் தகவல் திணைக்கள அடையாள அட்டையைப் பயன்படுத்த விரும்புவதில்லை.

ஆகவே சசி புண்ணியமூர்த்திக்கு இழைக்கப்பட்டமை அநீதி என்பதை ஊடக அமைப்புகள் வெளிப்படுத்த வேண்டியது கட்டாயப் பணி.

ஏனெனில் சசி புண்ணியமூர்த்திக்கு ஏற்பட்ட பாரபட்சம் ஒரு தேசியப் பிரச்சினை. ஆகவே தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களும், ஏனைய ஊடக அமைப்புகளும் சிவில் சமூக அமைப்புகளும் வன்மையாகக் கண்டிக்க முன்வர வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி