முன்னாள் ஒலிப்பிக் வீரர் சுசந்திகா ஜெயசிங்கவிற்கு கொரோனா தொற்று உறுதி!
Corona
SriLanka
Susanthika Jayasinghe
By Chanakyan
இலங்கையின் முன்னாள் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனையான சுசந்திகா ஜெயசிங்கவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவையடுத்து அவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரது இரண்டு குழந்தைகளும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
2000ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் மகளிர் 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற 47 வயதான சுசந்திகாவுக்கு பின்னர் வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது.
அவர் இரண்டு உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.