வியாழேந்திரனின் செயற்பாட்டால் மக்கள் கடும் அதிருப்தி
சர்ச்சைக்குரிய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதாக தெரிவித்து மக்கள் ஆணைப் பெற்ற இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் (Sathasivam Viyalendran), அதனை செய்ய முடியாத நிலைமைக்கு கூறும் காரணம் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் கொண்டுள்ள போதிலும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு எதிர்கட்சியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ்சின் ஆதரவு தேவை என சதாசிவம் வியாழேந்திரன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இவ்விரண்டு கட்சிகளினதும் ஆதரவு கிட்டிருந்தால், கடந்த அரசாங்கத்திலேயே இந்தப் பிரச்சினையை தீர்த்திருக்க முடியும் என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், வியாழேந்திரனின் கருத்து தொடர்பிலும் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.