யாழில் வீதியில் சாகசம் செய்யும் இளைஞர்கள் - ஒரே மாதத்தில் பலிபோன உயிர்கள்- பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி
கடந்த மாதம் மாத்திரம் வடக்கில் 09 இளைஞர்கள் வீதி விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வீதியை சாகசம் செய்யும் இடமாக கருதி, ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் இளைஞர்கள், விபத்துக்குள்ளாகி உயிரிழப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள் தொடர்பில் பணிப்பாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
வீதி விபத்துகள்
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அண்மைக்காலமாக வடமாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிக கவலையை ஏற்படுத்துகின்றன.

தற்கொலைகள் ஒருபுறமும், வீதி விபத்துகள் மறுபுறமும் பல குடும்பங்களிடமிருந்து பெறுமதியான இளம் உயிர்களைப் பறித்துச் செல்கின்றன.
கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில் வடமாகாணத்தில் 9 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்த சம்பவங்களை அடையாளம் காண முடிகிறது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணரின் அவதானிப்பின்படி, இளைஞர்கள் சம்பந்தப்பட்ட சில கடுமையான விபத்துகளில் மது அருந்துதல், அதிக வேகம் மற்றும் வீதியை சாகசம் செய்யும் இடமாகக் கருதும் ஆபத்தான மனப்பாங்கு முக்கியமான பிரச்சினைகளாகக் காணப்படுகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |