சவுதி அரேபிய பெண்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கை
பெண் சுதந்திரம் என்பது சவுதி அரேபிய நாடுகளை பொருத்தமட்டில் ஓர் பழமைவாத சிந்தனைவாதத்தை கொண்ட நாடாகவே காணப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச நாணயநிதியமானது, இம்மாதம் சவுதிய அரேபியா குறித்து முக்கியமான அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையின்படி,
சவுதி தடுப்பு முகாம்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பு!
தொழில்துறை ரீதியிலான பங்குபற்றல்
சவுதி அரேபியாவில் பல்வேறு துறைகளில் உள்ள மொத்த பணியிடங்களில் 36 சதவீதம் இடங்களில் பெண்கள் வேலை செய்கின்றனர்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் தனது ’விஷன் 2030’ இல், பணியிடத்தில் பெண்களின் மொத்த பங்களிப்பை 30சதவிகிதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளார்.
கடந்த 2022 இல் ஏற்கனவே இந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டது.
பல தசாப்தங்களாக தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாக இருந்த உலக நாடுகளில் சவுதி அரேபியாவும் இடம்பெற்றிருந்தது.
2018 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவின் தொழிலாளர் எண்ணிக்கையில் பெண்களின் பங்கு வெறும் 19.7 சதவிகிதம் மட்டுமே.
எண்ணெய் வருவாய்
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் ’விஷன் 2030’ இன் கீழ் தனது நாட்டை ஒரு நவீன பொருளாதாரமாக மாற்ற விரும்புகிறார்.
தனது நாடு எண்ணெய் வருவாயை மட்டுமே சார்ந்திருப்பதை குறைக்க அவர் நினைத்தார்.
இதன் கீழ் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் காரணமாக பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.