சவுதி அரேபியாவின் தீவிர நிலை! ஐரோப்பிய நாடுகள் விடுத்துள்ள எச்சரிக்கை
சவுதி அரேபியாவின் விமான நிலையங்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட தாக்குதலின் தீவிர நிலை குறித்து ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்தும் எச்சரிக்கை விடுத்து வருவதுடன் மத்திய கிழக்கின் நிலவரம் குறித்து கவலையெழுப்பியுள்ளன.
இதன்படி தற்போதைய சூழ்நிலை காரணமாக, அந்நாட்டின் ரியாத்தின் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தைத் தவிர்க்குமாறு ஜெர்மனியும் ஸ்பெயினும் தங்கள் குடிமக்களை வலியுறுத்தியுள்ளன.
ரியாத்தில் உள்ள ஜெர்மன் தூதரகம், தமது நாட்டு குடிமக்கள் விமான நிலையம் வழியாகப் பயணிப்பதைத் தவிர்க்குமாறு வலுவாக அறிவுறுத்துவதாக தெரிவித்துள்ளது.
விமனா நிலைய தாக்குதல்
இது குறித்து எக்ஸ் தளத்தில் ஜெர்மன் தரப்பு வெளியிடப்பட்ட ஒரு பதிவில், “சவூதி அரேபியாவில் உள்ள ஜெர்மானியக் குடிமக்கள், ஒரு நெருக்கடி"ஏற்பட்டால் முக்கியமான தகவல்களையும் வழிகாட்டுதலையும்"பெறுவதற்காக, கூட்டாட்சி வெளியுறவு அலுவலகத்தின் நெருக்கடி தயார்நிலை பட்டியலில் பதிவு செய்யவும்” என தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஸ்பானிய தூதரகம், குடிமக்களை “மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மற்றும் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும்” என எச்சரித்துள்ளது.
கிங் காலித் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முன்னர் விடுக்கப்பட்ட ஒரு பயண எச்சரிக்கை, கூடுதல் விவரங்கள் எதையும் வழங்காமல், பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் தங்கள் விமானத்தின் நிலையை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |