ரியாத் விமான நிலைய தாக்குதல் குறித்த ஹவுதிகளின் அறிவிப்பு: உள்நுழையும் பாகிஸ்தான்
சவூதி அரேபியாவின் ரியாத் மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சிக் குழு பொறுப்பேற்றுள்ளது.
அப்ஹா (Abha) மற்றும் கிங் காலித் (King Khalid) விமான நிலையங்கள் தாக்குதல்களுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சி குழு நேற்று பொறுப்பேற்றிருந்த நிலையில் இன்று ரியாத் மீதான தாக்குதலுக்கும் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.
உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளரான சவூதி அரேபியாவுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் அறிவித்த முற்றுகையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், "எங்கள் படைகளின் இலக்குகளாக விளங்கும்" எண்ணெய் ஆலைகளிலிருந்து விலகி இருக்குமாறு சவூதி அரேபியாவில் உள்ள மக்களுக்கு ஹூதிகள் தங்களது புதிய அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
தாக்குதலுக்கு உள்ளான விமானம்
எனினும் இந்த பொறுப்பேற்பு தொடர்பில் அவர்கள் கூறியபோதிலும், அதற்கான எந்த ஆதாரத்தையும் அவர்கள் வழங்கவில்லை என பிரித்தானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து சவூதி அரேபியா உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனினும் தாக்குதலின் காரணமாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த 'சவுதியா' பயணிகள் விமானம் ஒன்று குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முனையம் 4-ல் நிறுத்தப்பட்டிருந்த அந்த விமானத்தின் உடற்பகுதியில் விரிசல்களும் துளைகளும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
விமான நிலையத்தைக் குறிவைத்து மூன்று தனித்தனித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹூதிகள் வியாழக்கிழமை அறிவித்தனர்.
ரியாத் முழுவதும் பல வெடிச்சத்தங்கள் கேட்ட நிலையில், விமான நிலையத்தை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்ததாக சவூதி தலைமையிலான படைகள் தெரிவித்தன.
இந்நிலையில் சவூதி அரேபியா மீதான ஹூதிகளின் சமீபத்திய தாக்குதல்களை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டித்ததோடு, மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் சவூதி அரேபியாவின் பாதுகாப்பிற்கு இஸ்லாமாபாத் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |