ரஷ்ய மொழியில் பேசி சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்திய இலங்கையர்!
ரஷ்யாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தமது நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்த இலங்கையர் ஒருவர், அவர்களுடன் ரஷ்ய மொழியில் உற்சாகமாக உரையாடும் காணொளி சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
அந்நாட்டு ஊடகம் வெளியிட்ட காணொளியில், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் தாமாகவே ரஷ்ய மொழியைக் கற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மொஸ்கோ மற்றும் முர்மான்ஸ்க் உள்ளிட்ட ரஷ்யாவின் பல நகரங்களின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையரின் திறமை
அவரது ரஷ்ய மொழிப் புலமையையும் புவியியல் அறிவையும் கண்டு சுற்றுலாப் பயணிகள் வியப்படைந்துள்ளனர்.

இந்தச் சந்திப்பு தொடர்பான காணொளி இணையத்தில் பரவி வருவதுடன், சுயமாக ரஷ்ய மொழியைக் கற்றுக்கொண்ட இலங்கையரின் திறமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Man in Sri Lanka LIGHTS UP after discovering tourists are Russian — then surprises them with his FLUENT Russian He says he studied the language 10 years ago and enthusiastically lists cities, from Moscow to Murmansk https://t.co/4h9EuzHDZ1
— RTRussia (@RT_Russia_) October 8, 2026
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |