நாட்டின் தேசிய சொத்து ரணில் - அவரை மீண்டும் அதிபராக்குவோம்...!
“எமது மக்களைப் பசி,பட்டினியில் இருந்து காப்பாற்றிய அதிபர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் அதிபராக தெரிவு செய்ய வேண்டும்.
அடுத்த அதிபர் தேர்தலில் அனைத்து மக்களும் ஒருமித்து அவரை எமது நாட்டின் சொத்தாகத் தெரிவு செய்ய வேண்டும்."
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன வலியுறுத்தியுள்ளார்.
அதிபர் ரணில்
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அதிபர் ரணில் விக்ரமசிங்க உணவு நெருக்கடி, எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற பிரச்சனைகளை இல்லாமலாக்கி, மக்கள் போராட்டங்களை நீக்கி, வரிசை யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
விவசாயிகள் போராட்டங்களையும் இல்லாமலாக்கி அவர்களுக்கு சிறந்த தீர்வினையும் வழங்கியுள்ளார்.
அதிபராக பதவியேற்ற சிறிது காலத்திலேயே பெரும்பாலான பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார்.
ஆகவே, அடுத்த தேர்தலில் அதிபராக ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவாராயின் மக்கள் அவரை நாட்டின் சொத்தாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடையும்." இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
