ஷானி அபேசேகர - ரவி செனவிரத்னவுக்கு எதிரான மனு : உயர்நீதிமன்றின் உத்தரவு
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதி காவல்துறைமா அதிபர் ஷானி அபேசேகர, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் அருட்தந்தை சிறில் காமினி ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம்சாட்டி ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான சாந்த ஜயதிலக்க என்பவரால் இந்த இரண்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் முன்னர் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சத்தியக்கடதாசி ஒன்றின் மூலம், நீதிமன்ற அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்றம் உத்தரவு
அத்துடன் அருட்தந்தை சிறில் காமினி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் அளித்த முறைப்பாடொன்றின் உள்ளடக்கம் மூலம் நீதிமன்ற அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி மற்றைய மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய, குறித்த இரண்டு மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |