உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரி மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
Sri Lanka
G.C.E.(A/L) Examination
Law and Order
By Sathangani
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரி அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனுவை விசாரிக்காமலேயே தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.
பரீட்சைக்கு முதன்முறை மற்றும் இரண்டாம் முறை தோற்றவுள்ள ஐந்து மாணவர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஆரம்பமாகவுள்ள பரீட்சை
இதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் குறித்த பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி