பிரபல தமிழ் தொழிலதிபர் மரணம் - ஊடகவியலாளரிடம் தீவிர விசாரணை
Colombo
Sri Lanka Police Investigation
Crime
By Sumithiran
பிரபல தொழிலதிபரும் ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளருமான தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரமவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட பின்னர், சமுதிதாவிடம் இரண்டரை மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
நேர்காணலால் எழுந்த சந்தேகம்
சம்பவம் நடந்த அதே நாளில் ஷாஃப்டரின் மரணம் குறித்து புலனாய்வு ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்கவுடன் வலைத்தளத்தில் 40 நிமிட நேர்காணல் நடத்தியதன் அடிப்படையில் சாமுதிதாவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொரள்ளை மயானத்திற்குள்
பொரள்ளை மயானத்திற்குள் தினேஷ் ஷாப்டர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 23 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்