உயர்தரம் தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு அதிபர் ஊடக பிரிவு விடுத்துள்ள மகிழ்ச்சித் தகவல்!

Ministry of Education Sri Lanka G.C.E. (O/L) Examination Education
By Beulah Dec 01, 2023 01:06 PM GMT
Report

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு அதிபர் விசேட அறிவித்தலொன்றினை விடுத்துள்ளார்.

அவ்வகையில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு கடந்த வருடத்தைப் போன்று, இந்த வருடமும் அதிபர் நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைய அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலில் மேற்படி புலைமைப்பரிசில் திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (01) ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை யுத்தகுற்றவாளிகளை தடைசெய்வது குறித்து பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதம்!

இலங்கை யுத்தகுற்றவாளிகளை தடைசெய்வது குறித்து பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதம்!

புலமைப்பரிசில் திட்டம்

அதன்படி நாட்டிலுள்ள 100 கல்வி வலயங்களும் உள்ளடங்கும் வகையில் ஒரு கல்வி வலயத்தில் இருந்து 50 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, 5000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.

உயர்தரம் தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு அதிபர் ஊடக பிரிவு விடுத்துள்ள மகிழ்ச்சித் தகவல்! | Scholarships For Al Students President S Fund

கடந்த வருடத்தில் 3000 மாணவர்களுக்கு 24 மாதங்களாக அதிபர் நிதியத்தினால் புலைமைப் பரிசில் வழங்கப்பட்டது.

அடிப்படை தகுதிகள்

விண்ணப்பதாரர்களின் அடிப்படை தகுதிகளாக பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

உயர்தரம் தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு அதிபர் ஊடக பிரிவு விடுத்துள்ள மகிழ்ச்சித் தகவல்! | Scholarships For Al Students President S Fund

  1. 2022 (2023) ஆண்டில் க.பொ.த (சா.த) பரீட்சைக்கு முதன்முறையாக தோற்றி, சித்தியடைந்து உயர்தரப் பயில்வதற்கு தகுதிபெற்றிருத்தல்.
  2. அரச அல்லது கட்டணம் அறவிடப்படாத தனியார் பாடசாலையில் கல்வி கற்றல்.
  3. குடும்ப மாத வருமானம் 100,000 ரூபாவிற்கு குறைவாக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பப் படிவம்

இந்த புலைமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை அதிபர் செலயகம் presidentsoffice.gov.lk, அதிபர் நிதியம் presidentsfund.gov.lk அதிபர் ஊடகப் பிரிவு pmd.gov.lk ஆகிய இணையதளங்களில் தறவிறக்கம் செய்யலாம்.

உயர்தரம் தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு அதிபர் ஊடக பிரிவு விடுத்துள்ள மகிழ்ச்சித் தகவல்! | Scholarships For Al Students President S Fund

அந்த விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சாதரண தரம் கற்ற பாடசாலை அதிபர்களிடத்தில் கையளிக்கப்பட வேண்டும்.

இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர்களின் ஒத்துழைப்பை அதிபர் நிதியம் எதிர்பார்க்கிறது.

விடுதலைப் போராளிகளைப் போல் ஆடையணிந்த சிறுவர்கள்! இனவாதத்தை கக்கும் பௌத்த தேரர் (படங்கள்)

விடுதலைப் போராளிகளைப் போல் ஆடையணிந்த சிறுவர்கள்! இனவாதத்தை கக்கும் பௌத்த தேரர் (படங்கள்)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்     


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்