கோர விபத்துக்குள்ளான மாணவர்கள் பயணித்த பேருந்து: வெளியான காரணம்
புதிய இணைப்பு
கடுவெல (Kaduwela), ரணால பகுதியில் தனியார் பேருந்து மற்றும் மாணவர் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானமைக்கு கவனக்குறைவாக பேருந்துகளை செலுத்தியமையே காரணம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (19.06.2024) கொழும்பில் (colombo) இருந்து லபுகமுவ நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்ற மாணவர் பேருந்தும் எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.
இந்த விபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவர்கள் உட்பட 50 பேர் நவகமுவ மற்றும் அவிசாவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹன்வெல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
கடுவெல, ரணால பகுதியில் தனியார் பேருந்து மற்றும் சிசு செரிய பாடசாலை மாணவர் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் இன்று (19.06.2024) பிற்பகல் இரண்டு மணியளவில் கடுவெல, ரணால பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
கொழும்பில் இருந்து லபுகமுவ நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்ற மாணவர் பேருந்தும் எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |