ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்ட கார் விபத்து : மயிரிழையில் தப்பிய குடும்பத்தினர்
Nuwara Eliya
Sri Lanka
Accident
By Raghav
ஹொரணையில் (Horana) இருந்து நுவரெலியா (Nuwara Eliya ) நோக்கி பயணித்த வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் (Hatton) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று அதிகாலை 5.15 மணியளவில் ஹட்டன் – கொழும்பு (Colombo) பிரதான வீதியில் குயில்வத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சாரதி தூங்கியதால், வாகனம் சாலையை விட்டு விலகி தேயிலைத் தோட்ட பகுதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், கார் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்