பாடசாலை போக்குவரத்து சேவை தொடர்பிலான முக்கிய அறிவித்தல்!
sri lanka
students
school
bus service
By Thavathevan
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வுகாணாவிட்டால், பாடசாலை போக்குவரத்து சேவையினை நிறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் மாவட்டங்களுக்கிடையிலான பாடசாலை போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் இருந்து விலகுவதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எந்தவொரு ஆதரவும் கிடைக்காவிட்டாலும், பரீட்சை மற்றும் கல்விசார் நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.எம்.கே ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்துள்ளார்.
அத்தோடு எதிர்வரும் முதலாம் திகதிக்குள் சாதகமான தீர்வு வழங்கப்படாவிட்டால், தமது சேவைகளில் இருந்து விலகிக் கொள்வதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி