யானை தாக்கியதில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
காவந்திஸ்ஸ ரஜமஹா விகாரைக்கு வருடாந்த ஊர்வலத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டு ஆலயத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த யானை தாக்கியதில் 12 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த ஆலயத்தில் யானை கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு இன்று(15) யாரிடமும் கூறாமல் மாணவன் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவலதுறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
விசாரணை
யானை தாக்கியதில் பலத்த காயங்களுக்குள்ளான மாணவனை, ஆலய உத்தியோகத்தர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தொிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பில் பனாமுற காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்