மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 19 வயது இளைஞன் - யாழில் சம்பவம்
Jaffna
Sri Lanka Police Investigation
By pavan
யாழ்ப்பாணம் - பாசையூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றையதினம் (06) இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞன் ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதிக்கு சென்று அங்குள்ள மரம் ஒன்றில் கயிற்றினை கட்டி அதில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார்.
காதல் தோல்வி என சந்தேகம்
அவரது கையில் உள்ள வசனங்களை பார்வையிட்ட காவல்துறையினர், காதல் தோல்வியால் இந்த சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி