மீண்டும் வழமைக்கு திரும்பும் கல்வித்துறை! அமைச்சர் உறுதி
ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணையினை வழக்கம் போல ஜனவரி மாதமே ஆரம்பிப்பதை 2025 ஆம் ஆண்டுமுதல் நடைமுறைக்கு கொண்டுவர இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நேற்று (14)புனித அந்தோனியார் மகளிர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடைப் பொருட்கள் விநியோகிக்கும் தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு விசேட உரை ஆற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவித்ததாவது,
உயர்தர பரீட்சை பெறுபேறுகள்
"2023 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சை பல காரணங்களால் ஐந்து வாரங்களுக்கு பிற்போடப்பட்டு பின்னர் இந்த ஆண்டு (2024) ஜனவரியில் தேர்வு இடம்பெற்றது.
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர (உ/த) பரீட்சை பெறுபேறுகளை இவ்வருடம் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கிடையில் வெளியிடுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
புதிய பாடசாலை தவணை
அதனைத் தொடர்ந்து வருடத்தின் பிற்பகுதியில் திட்டமிடப்பட்டபடி சாதாரண தர (சா/த) பரீட்சையும் இடம்பெறும், ஆனால் எவ்வாறாயினும், 2024 உயர்தர பரீட்சையை இந்த ஆண்டிலேயே நடத்தும் போது இதனைத் தொடர்ந்து அனைத்து பரீட்சைகளையும் இனி வரும் ஆண்டுகளில் உரிய காலத்தில் நடாத்த முடியும்." என்றார்.
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் 2025 ஆம் ஆண்டு முதல், ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை வழக்கம் போல ஜனவரியில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |