அதிகாலைவேளை துயரம் : மண்மேடு சரிந்து வீழந்ததில் நித்திரையிலிருந்த மாணவன் மரணம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Hospitals in Sri Lanka
By Jaso
மெதமஹனுவர, வத்துலியத்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இன்று (20) அதிகாலை அப்பகுதியில் பெய்த கடும் மழையை அடுத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெல்தெனிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
உறங்கிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன்
விபத்தின்போது உறங்கிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் வீட்டின் மண் மற்றும் சுவர்களுக்கு இடையில் சிக்கி அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வத்துலியத்த பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் என தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்