அதிகரிக்கும் பதற்றம் : இஸ்ரேலில் மூடப்படும் பாடசாலைகள்
Israel
Israel-Hamas War
By Sumithiran
2 years ago
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடர்ந்து நடந்து வரும் சண்டையை முன்னிட்டு, இஸ்ரேல் முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் வரவுள்ள நாட்களில் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளதாக தி டைம்ஸ் ஒப் இஸ்ரேல் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதவிர, நேதன்யாகுவுக்கு தெற்கே மற்றும் மத்திய நெகேவ் பகுதிக்கு வடக்கே வர்த்தக நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
வர்த்தக செயற்பாட்டுக்கும் கட்டுப்பாடு
வெடிகுண்டு புகலிடங்களுக்கான வசதிகள் உடனடியாக கிடைக்குமென்றால் மட்டுமே வர்த்தக நடவடிக்கைகளை செயல்படுத்தலாம் என இராணுவம் அறிவித்துள்ளது.
ஒன்று கூடவும் தடை
இதேபோன்று, இந்த பகுதிகளில், வெளியே 10 பேருக்கு கூடுதலாக ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டு உள்ளது. உள்ளரங்கங்களில் 50 பேருக்கு கூடுதலாக ஒன்றுகூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்