அடுத்த மூன்று ஆண்டுகளில் பாடசாலைகளில் ஏற்படப்போகும் மாற்றம் : கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
எதிர்காலத்தில் பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கலில் உள்வாங்கப்படும். அதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட 1,250 பாடசாலைகள் தற்போது வலையமைப்பின் ஊடாக இணைக்கப்பட்டுள்ளன. அடுத்த மூன்று ஆண்டுகளில் 10,026 பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த(susil prejayantha) தெரிவித்துள்ளார். காலி(galle) – ஹால் டி கோல் ஹோட்டலில் இன்று (06) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நவீன வகுப்பறைகள்
இன்று தென் மாகாணத்திலுள்ள இருநூறு பாடசாலைகளில் நவீன வகுப்பறைகள் உள்ளன. 2,000 டெப் கணினிகள் சொந்தமாக உள்ளன. இதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப அறிவைப் பெற்ற பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களில் 93% தொழில் சந்தையில் தொழில்வாய்ப்புக்கள் உள்ளன. நவீன தொழில்நுட்பத்தின் மூலம் உலகை வெல்லும் வாய்ப்பை நாம் பயன்படுத்த வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
இலவசக் கல்விச் சட்டம்
இலவசக் கல்விச் சட்டம் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன்படி, 46% ஆக இருந்த எழுத்தறிவு விகிதம் 93% ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், நவீன வகுப்பறைகள் என்பன அவசியமாகும். அதற்கு இந்தியா வழங்கிய ஆதரவுக்கு நன்றி என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |