மனித மூளையை ஆராய்ந்த விஞ்ஞானிகள்: ஆச்சரியத்தில் ஆழ்த்திய கண்டுபிடிப்பு
மனித மூளையின் சிறிய மாதிரியில் 57,000 செல்கள் மற்றும் 150 மீற்றர் நரம்பு இணைப்புகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த கண்டுப்பிடிப்பு தொடர்பில் மேலும் தெரியவருகையில், கால் மற்றும் கை வலிப்புக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 45 வயதுப் பெண்ணின் புறணிப் பகுதியில் இருந்து அகற்றப்பட்ட ஆரோக்கியமான திசுவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்தே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
புள்ளியில் உள்ள நரம்பியல் சுற்றுகள், இணைப்புகள், துணை செல்கள் மற்றும் இரத்த விநியோகத்தை வரைபடமாக்குவதற்கு ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள் (Harvard researchers) கூகுளில் (Google) உள்ள இயந்திரக் கற்றல் நிபுணர்களுடன் இணைந்துள்ளனர்.
நுண்ணோக்கி படங்கள்
இந்நிலையில், மாதிரியின் 5,000 இற்கும் மேற்பட்ட துண்டுகளின் எலக்ட்ரான் நுண்ணோக்கி படங்கள் வெளிப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதனுடன் 57,000 தனிப்பட்ட செல்கள், 150 மீற்றர் நரம்பு இணைப்புகள் மற்றும் 23 சென்றிமீற்றர் இரத்த நாளங்கள் வெளிப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |