அரசாங்கத்தின் முடிவால் நிர்கதியாகும் ஜேவிபியின் முன்னாள் எம்பி
ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக அரசியல் மற்றும் செயல்பாடுகளுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் கடுமையான நிதி நெருக்கடிகளை எடுத்துக் காட்டி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதாக எடுத்துள்ள முடிவை மேற்கோள்காட்டி அவரின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில், தனது பயணத்தை நினைவுகூர்ந்த குணதிலக, 1990களின் முற்பகுதியில் தனது பல்கலைக்கழகக் கல்வியைத் துறந்து, நிலையற்ற அரசியல் சகாப்தத்தில் ஆயுதங்களை ஏந்தி, கட்சியின் தலைமறைவுப் போராட்டத்தில் முழுநேரமாக இணைந்ததாகக் கூறியுள்ளார்.
மாதாந்திர ஓய்வூதியம்
சகோதரர்களின் சட்ட மற்றும் மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட, தனது குடும்ப வீடு உட்பட தனிப்பட்ட சொத்துக்களைப் பயன்படுத்தி, நிலையான வருமானம் இல்லாமல் பல ஆண்டுகள் கழித்து, பல ஆண்டுகளாகத் தான் வாழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 63 வயதாகும் குணதிலக, ரூ.68,000 மாதாந்திர ஓய்வூதியத்தில் மட்டுமே வாழ்ந்து வருவதாகவும்வாடகை, பயன்பாட்டு பில்கள் மற்றும் மருத்துவச் செலவுகளைச் செலுத்திய பிறகு, உணவு மற்றும் பிற செலவுகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.700–800 மட்டுமே அவருக்கு மிஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தன்னை போலவே ஜே.வி.பி., சிறிலங்கா சுதந்திரக் கட்சி, யூ.என்.பி. மற்றும் டி.என்.ஏ.வைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட முன்னாள் நாடாளுனமன்ற உறுப்பினர்கள் அமைதியாக அவதிப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் மாலை திருவிழா
