ஆப்கானில் மாணவ, மாணவிகளுக்கு நடுவே அமைக்கப்பட்டது திரை
students
afghanistan
screen
By Sumithiran
ஆப்கானில் உள்ள கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு நடுவே திரை அமைத்து வகுப்புகள் நடத்துவது போல் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
காபூலில் உள்ள அவிசென்னா பல்கலைகழகத்தில் உள்ள வகுப்புகளில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் நடுவே திரை அமைத்து தனித்தனியாக பிரித்து பாடம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மாணவர்களுக்கு தனி வகுப்புகள் மாணவிகளுக்கு தனி வகுப்புகள் என தாலிபான்கள் அறிவித்து இருந்த நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.