சிலாப பகுதியில் கரையொதுங்கிய அரியவகை கடலாமை! (படங்கள்)
Puttalam
By Mathu
புத்தளம் சிலாபம் கடற்கரைப் பகுதியில் அரியவகை கடலாமை ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
கரையொதிங்கிய கடலாமையானது ஒலிவ நிற வகையைச் சார்ந்தது என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கடலாமையானது 40 -50 கிலோவிற்கு இடைப்பட்ட எடைக் கொண்டு காணப்படுவதாக அக்கிராம கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆமையின் ஓடு

இவ்வாறு கண்டெடுத்த ஆமையின் ஓடானது உடைந்த நிலையில் காணப்படுவதாகவும் அக்கிராம கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் கொழும்பு துறைமுக கடற்பரப்பிற்கு வெளியே எம்.வி. எக்ஸ்பிரஸ் கப்பல் தீப்பிடித்து எரிந்ததைத் தொடர்ந்து பல கடலாமைகள், டொல்பின்கள், திமிங்கலங்கள் தொடர்ந்தும் உயிரிழந்த நிலையில் கரையொதிங்கியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்