யாழில் பாடசாலை மாணவர்களுக்கு பேருந்தில் பயணிக்க முடியாத நிலை
யாழ். மாங்குளம் பகுதியில் இருந்து மேலதிக கல்விக்காக கிளிநொச்சிக்கு செல்வதற்கு பணம் கொடுத்து மாதாந்திர பயணச்சீட்டை பெற்றுக் கொண்டாலும் பாடசாலை மாணவர்களுக்கு பேருந்தில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொலைதூரத்திலிருந்து கல்விக்காக கிளிநொச்சி வரும் மாணவர்களுக்கு மாதாந்திர பயணச்சீட்டு வழங்கப்பட்ட போதிலும் அரச பேருந்துகள் மாணவர்களை ஏற்றிச் செல்வதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மாலை 5.30 க்கு தனியார் கல்வி நிலையங்கள் வகுப்புகள் முடிவடைந்தாலும் அரச பேருந்துகளில் மாணவர்களை ஏற்றுவதில்லை என மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
சிரமத்தில் மாணவர்கள்
அயல் மாவட்டங்களிலிருந்து கிளிநொச்சியில் உள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கு மேலதிக கல்விக்காக வருகின்ற போதும் திரும்பி செல்கின்ற போதும் மாதாந்திர பயணச்சீட்டு வழங்கப்பட்ட போதிலும் அரச பேருந்துகள் மாணவர்களை ஏற்றிச் செல்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக மாங்குளம் பகுதியில் இருந்து வருகைத்தரும் மாணவர்கள் தங்களின் கல்வியை சரியான முறையில் தொடர முடியாமல் உள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



