இரண்டாவது தென்னை முக்கோண வலய நடவடிக்கைகள் மன்னாரில் ஆரம்பம் (படங்கள் )
நாட்டின் இரண்டாவது தென்னை முக்கோண வலயமான வடக்கு தென்னை முக்கோண வலய பயிர்செய்கை நடவடிக்கை மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (17) இந்த முக்கோண வலயத்துக்கான தென்னம் கன்றுகளை நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
மன்னார் ஆன்டாங்குளம் பாடசாலையில் வைத்தே இந்த நிகழ்வு வைபவரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு இலட்சம் கன்றுகள்
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக, ஒரு இலட்சம் தென்னம் கன்றுகள் நடும் நிகழ்வு இதன்போது முன்னெடுக்கப்பட்டது.

சி.ஐ.சி அக்ரிபிஸ்னஸ் (CIC Agri Business) நிறுவனத்தின் சமூக மேம்பாட்டுக்கான பொறுப்புடன் கூடிய செயலாற்றுகையின் மூலமாக வடமாகாணத்தில் புதிய தெங்கு முக்கோண வலய விருத்திக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.
பொருளாதாரத்தை மேம்படுத்த
இந்த தெங்கு முக்கோண வலய விருத்தியின் வாயிலாக கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பாடசாலை மாணவர்களை பயன்படுத்தி இந்த விடயத்தினை ஊக்குவித்து பங்களிப்பு செய்து வருகின்றது.

இந்த இரண்டாவது தென்னை முக்கோண வலயமானது கடந்த செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்