யாழ் பல்கலைக்கழத்தின் இரண்டாவது இந்து சர்வதேச மாநாடு
இந்துக் கற்கைகள் பாரம்பரியமும் பண்பாட்டு எனும் தொனிப்பொருளில் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் மாநாடு தலைவர் ச.பத்மநாபன் தலைமையில் இன்று(21) வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா கலந்துகொண்டுள்ளார்.
இரண்டாவது இந்து சர்வதேச மாநாடு
குறித்த மாநாட்டில் 54 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படன.
இந்து கற்கைகள் பீடச்சபையின் ஏகோபித்த ஆதரவுடன் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தின் பிரதம குருவாக இருந்து தேகாந்த நிலையை அடைந்த அமரர் கு.நகுலேஸ்வர குருக்களுக்கு மெய்ப்பொருள் விருதும், சைவ சமூக பணியாற்றும் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகனுக்கு ஞானவாய்ச்சியன் விருதும், இலங்கையில் இந்து பண்பாட்டுக்கு உழைக்கும் அகில இலங்கை இந்து மாமன்றத்திற்கு சிவநிதி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டில் இந்த ஆய்வு மாநாடு நடைபெறவுள்ளமை விசேட அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |