இரண்டாம் வட்டுக்கோட்டைத் தீர்மானம் -இணையவழி மாநாடு
ஈழத் தமிழர் புவிசார் அரசியலில் இந்திய அரசின் உடனடித் தலையீட்டை வலியுறுத்தும் தீர்மானம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இரண்டாம் வட்டுக்கோட்டைத் தீர்மானக் குழு நடத்தும் இணைய வழி மாநாட்டில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. “ ஈழத் தமிழர் புவிசார் அரசியலில் இந்திய அரசின் உடனடித் தலையீடு காலத்தின் கட்டாயம்” எனும் உள்ளடக்கத்துடன் நாளை ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் பிற்பகல் 02 மணிமுதல் இரவு 08 மணிவரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு ஈழத் தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில், சென்னைப் பல்கலைக்கழக அரசியல்துறை பேராசிரியர் இராமு மணிவண்ணனின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலின் பின்னர் ஈழத் தமிழர் அரசியல் கட்சித் தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றவுள்ளனர்.
இந்த தீர்மானம் இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இறுதியாக தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் அறிஞர்களின் சிறப்புரையுடன் குறித்த மாநாடு நிறைவுபெறவுள்ளது.