அரசாங்கத்திற்கு எதிராக நாடாளவிய ரீதியில் களமிறங்கும் பங்காளிகட்சிகள்
meeting
wimal weerawansa
island wide
By Jaso
அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில வீட்டில் கடந்தவாரம் இரகசிய கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளின் 11 தலைவர்கள் அண்மையில் கொழும்பில் ஆரம்பித்த மக்கள் சபை கூட்டத் தொடரை நாடு முழுவதும் மாவட்ட மட்டத்தில் நடத்த தீர்மானித்துள்ளனர்.