இதுதான் எங்களின் நிலைப்பாடு! அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் இரகசியச் சந்திப்பு
முன்னாள் சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தலைமையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்றையதினம் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் அரசுக்கு ஆதரவு வழங்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் உட்பட தேசிய வளங்களை பாதுகாப்பது தொடர்பிலேயே இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் இநதச் சந்திப்பில் துறைமுகம், மின்சாரம் மற்றும் எரிபொருள் சார் துறைகளின் தொழிற்சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது யுகதனவி மின்உற்பத்தி நிலையத்தை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கும் முடிவு பாரதூரமானது எனவும் இதனை தடுப்பதற்கு பங்காளிக்கட்சிகள் தலையீடு செய்ய வேண்டும் எனவும் தொழிற்சங்க பிரமுகர்கள் கோரிக்கை விடுதுள்ளனர்.
இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) சந்தித்து பேச்சு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய வளங்களை பாதுகாப்பதற்கு முன்நின்று செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளன.
இந்த சந்திப்பின் பின்னர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vaduva Nanayakara) கருத்து வெளியிடுகையில்,
தேசிய வளங்கள் என்பது தேசிய பாதுகாப்பின் ஒரு அங்கமாகும். எனவே, அவை விற்பனை செய்யப்படக்கூடாது. இந்த நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம். வேறு நபர்கள் மாறுபட்ட நிலைப்பாட்டில் இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது அரசுக்கு எதிரான சந்திப்பு அல்ல. நாட்டை கட்டியெழுப்புவது தொடர்பான கலந்துரையாடல் என முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.