தமிழ் பிரதிநிதிகளுடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் பேச்சு
meeting
tamil parties
indian foreign secretary
By Vanan
இலங்கையில் உள்ள தமிழ் பிரதிநிதிகளை, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா (Harsh Vardhan Shringla) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளை அவர் இன்று (04) சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் பின், “13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலமும், மாகாண சபை தேர்தலை முன்கூட்டியே நடத்துவதன் மூலமும், நல்லிணக்கத்தை அடைவதன் மூலமும், இந்தியாவுடன் இணைப்பை ஏற்படுத்துவதன் மூலமும் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்திய வெளிவிவகார செயலாளர் வலியுறுத்தியதாக” இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
