புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கையில் பாதுகாப்பு முக்கியம் - வடக்கு ஆளுநர் கரிசனை
tamil
sri lanka
diaspora
Jeevan Thiagarajah
By Vanan
வட மாகாண ஆளுநர் என்ற வகையில் இலங்கையில் முதலீடு செய்வதற்கான அழைப்பை புலம்பெயர் தமிழர்களுக்கு தாம் விடுத்தாலும் அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவது முக்கியமானது என ஜீவன் தியாகராஜா (Jeevan Thiagarajah) தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் அவர் இதனைக் கூறினார்.
இலங்கைக்கு வருகைதரும் புலம்பெயர் தமிழர்கள் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டு, அச்சுறுத்தப்படுவதாக பாதிக்கப்பட்ட தரப்பினரால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த போதே ஜீவன் தியாகராஜா இதனைக் கூறியுள்ளார்.