உலக வாழ் தமிழர்களிடம் சீமான் உருக்கமான கோரிக்கை
ஈழத்தில் இனப்படுகொலை நடந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இலங்கையில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதனால், உலகெங்கும் பரவி வாழ்கின்ற எனது அன்பிற்கினிய உறவுகள், என் உடன் பிறந்தார்கள், பேரன்புமிக்க எனது பெற்றோர்கள், என் பாசத்திற்குரிய தம்பி - தங்கைகள் என எல்லோரும் இணைந்து எம்மால் இயன்றதை, எம் மக்களுக்குச் சேகரித்து அனுப்ப வேண்டிய கடமை ஏற்பட்டுள்ளது.
எனவே, அன்பிற்குரிய உறவுகள் தங்களால் இயன்றதை பொருட்களாகவோ? நிதியாகவோ? வழங்கி எம் இன மக்களின் துயரில் துணைநிற்க வேண்டுமாய் அன்போடும் உரிமையோடும் அழைப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
“இயன்றதைச் செய்வோம்.! பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் எம் ஈழச்சொந்தங்களுக்கு” எனும் தொனிப்பொருளில் அவர் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு தெரித்துள்ளார்.
இயன்றதைச் செய்வோம்..!
— சீமான் (@SeemanOfficial) June 4, 2022
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நம் ஈழச்சொந்தங்களுக்கு..!https://t.co/zq6oUIkuGr pic.twitter.com/18V6eehRak
