தமிழ்நாடு என்பதை மாற்றி கருணாநிதி வீடு என வையுங்கள் - திமுகவை விளாசும் சீமான்
திமுக தலைமையிலான தமிழக அரசின் 1000 ரூபா உதவித் திட்டத்தை எதிர்த்து வரும் சீமான் அந்த உதவித்திட்டத்திற்கு கருணாநிதியின் பெயர் வைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழநாடு என்பதற்கு பதிலாக கருணாநிதி வீடு என வையுங்கள் என விமர்சித்துள்ளார்.
கலைஞர் உரிமைத் தொகை என வைக்கப்பட்டுள்ள இந்த உதவித்திட்டத்தின்மூலம் தமிழ்நாட்டு பெண்களை 1000 ரூபாய்க்கு கையேந்தும் நிலையில்தான் திமுக வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது நாடா இல்ல கருணாநிதி வீடா
இந்த திட்டத்திற்கு ஊக்கத் தொகை என்று வழங்காமல் எதற்கு கலைஞரின் பெயரில் உரிமை தொகை என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சீமான்,
இது நாடா இல்ல கருணாநிதி வீடா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழ்நாடு என்ற பெயரை எடுத்துவிட்டு கருணாநிதி நாடு என்று வைத்து விடுங்கள் என்றும் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குடிப்பதற்கும் கலைஞர் பெயர்
எல்லாவற்றுக்கும் கருணாநிதி பெயரை வைத்தபிறகு நாட்டுக்கும் கருணாநிதி பெயரை வைத்தால் என்னவாகி விடப்போகிறது என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருணாநிதி உரிமைத் தொகை என்று பெயர் வைக்க காரணம் என்னவென்று கேட்ட சீமான், படிப்பகத்திற்கு கலைஞர் பெயரை வைக்கும் போது, குடிப்பகத்துக்கு ஏன் கலைஞர் பெயர் வைக்கக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார்.
