ஆறு தமிழர் விடுதலையை விரைவுபடுத்துங்கள் - தமிழக அரசிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை

Rajiv Gandhi Tamil nadu Seeman
By Sumithiran Jun 10, 2022 11:45 PM GMT
Report

ஆறுபேரின் விடுதலை

ஆறுபேரின் விடுதலைக்கான முன்னெடுப்புகளை விரைந்து முன்னெடுத்து சாத்தியப்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஏழு தமிழர் விடுதலை விவகாரத்தில், நீண்ட நெடிய சட்டப்போராட்டம் நடத்தியதன் பயனாக தம்பி பேரறிவாளன் விடுதலை பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள ஆறு பேருக்கும் விடுதலையை விரைந்து சாத்தியப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவது ஏமாற்றமளிக்கிறது.

தம்பி பேரறிவாளன் தொடுத்த வழக்கின் தீர்ப்பில், அமைச்சரவைத்தீர்மானமே இறுதி முடிவென்றும், தமிழக அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்தானென்றும், இவ்விடுதலை தொடர்பாக முடிவெடுக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரமில்லையென்றும்,விடுதலைக்கோப்பை குடியரசுத்தலைவருக்கு அனுப்புவதற்கு சட்டபூர்வபின்புலமில்லையென்றும் தெளிவுபடக்கூறி, மாநிலத்தின் உரிமையை உறுதிப்படுத்தி, தமிழக அரசுக்கு வழிகாட்டியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

ஆறு தமிழர் விடுதலையை விரைவுபடுத்துங்கள்  - தமிழக அரசிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை | Seeman Urges Nalini And 5 Others Release

ஆகவே, அதனை அடிப்படையாகக்கொண்டு ஆறு தமிழர்களையும் விடுதலைசெய்து மாநிலத்தின் தன்னுரிமையை நிலைநிறுத்த வேண்டியது தமிழக அரசின் தார்மீகக்கடமையாகும்.

பேரறிவாளன் விடுதலை

கடந்த 09-09-18 அன்று, முந்தைய அதிமுக ஆட்சியில் எழுவர் விடுதலைக்காக, 161வது சட்டப்பிரிவின்படி தமிழகச்சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதலளிக்காது, காலங்கடத்தி குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநரின் செயலைக்கண்டித்து, 142வது சட்டப்பிரிவு தரும் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி தம்பி பேரறிவாளனை விடுதலைசெய்தது உச்ச நீதிமன்றம். விடுதலை செய்யக்கோரும் சட்டமன்றத்தீர்மானமும், பேரறிவாளனை விடுதலைசெய்த உச்ச நீதிமன்றத்தீர்ப்பும் மீதமிருக்கும் அறுவருக்கும் பொருந்தும் எனும் அடிப்படையில் இதனைக்கொண்டு அவர்களது விடுதலைக்கான வாசலை திறந்துவிட வேண்டியது பேரவசியமாகிறது.

அதனைவிடுத்து, ஆறுபேரும் தங்களுக்கான விடுதலையை தாங்களே சட்டப்போராட்டம் நடத்தி பெற்றுக்கொள்ள வேண்டுமெனும் நிலைக்கு மாநில அரசு தள்ள நினைத்தால், அது ஒருபோதும் ஏற்புடையதல்ல!

தம்பி பேரறிவாளன் கொடுத்த தீர்ப்பின் மூலம் இவ்விடுதலை விவகாரத்தில் மாநிலத்தின் உரிமை உறுதிபெற்றுள்ள நிலையில், அதனைக்கொண்டு ஆறுபேரையும் விடுதலைசெய்வதற்குரிய வழிவகைகளை தமிழக அரசு தொடங்க வேண்டும்.

ஆறு தமிழர் விடுதலையை விரைவுபடுத்துங்கள்  - தமிழக அரசிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை | Seeman Urges Nalini And 5 Others Release

ஆகவே, இவ்விவகாரத்தில் மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் முதன்மைக்கவனமெடுத்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முன்வைத்து, தமிழக ஆளுநருக்கு உரிய அழுத்தம் கொடுத்து 161வது சட்டப்பிரிவின்படி இடப்பட்ட சட்டமன்றத் தீர்மானத்துக்கு ஒப்புதலைப் பெற வேண்டுமெனவும், அக்கா நளினி, தம்பி ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஏற்கனவே தொடர் விடுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் எஞ்சியவர்களான தம்பிகள் இராபர்ட் பயஸ், முருகன், சாந்தன் மற்றும் ஜெயக்குமார் ஆகிய நால்வருக்கும் நீண்ட நெடிய சிறை விடுப்பு வழங்க முன்வர வேண்டுமெனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025