கோடீஸ்வரர்கள்,தொழிலதிபர்களுக்கு பெண்களை விற்கும் இடம் கண்டுபிடிப்பு
பெண்களை கோடீஸ்வரர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு விற்பனை செய்யும் ஒரு இடம் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நுகேகொடை நாவல வீதி பகுதியில் கால் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நீண்ட காலமாக இந்த செயற்பாடு இடம்பெற்று வந்ததாகவும் 14 பெண்களும், அந்த நிறுவன முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நுகேகொடை ஊழல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஆயுர்வேத மசாஜ் நிலையமென விளம்பரம்
ஆயுர்வேத மசாஜ் செய்ய இடம் உள்ளதாக இணையதளத்தில் விளம்பரம் செய்து, அந்த இடத்திற்கு வரும் தொழிலதிபர்களுக்கு பெண்களை மிக அதிக விலைக்கு விபசாரத்துக்கும், வெளியில் அழைத்துச் செல்வதற்கும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட இக்கட்டடத்தில் 7,000 ரூபா முதல் 25,000 ரூபா வரையிலான விலைக்கு பெண்களை விற்பனை செய்வதும், அறைக் கட்டணமும் வசூலிக்கப்படும்.
நீதிமன்றில் முன்னிலை
இந்த தகவல்கள் கைது செய்யப்பட்ட முகாமையாளரிடம் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 14 பெண்களும், முகாமையாளரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக மிரிஹான காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக நுகேகொட பிரிவு ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.