கரன்னாகொட-ரொஷானை வீட்டிற்கு அனுப்புங்கள் - அமைச்சர்கள் போர்க்கொடி
Ranil Wickremesinghe
Sri Lanka Government
By Sumithiran
வடமேல் மாகாண ஆளுநர் வசந்த கரன்னாகொட மற்றும் மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க ஆகியோர் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளனர்.
இந்த இரண்டு ஆளுநர்களும் மாகாணங்களில் இராணுவ ஆட்சியை நடத்துகிறார்கள் என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே, இந்த இரண்டு ஆளுநர்களையும் நீக்கிவிட்டு வேறு யாரையாவது நியமிக்க வேண்டும் என்றும் எம்பிக்கள் குழு அதிபர் ரணிலிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும், இது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பதாக அதிபர் தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி