இஸ்ரேலுக்கு ஏற்படப்போகும் பேரழிவு : ஒன்றிணையும் ஹமாஸ், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்
ஹமாஸ் மற்றும் யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் மூத்த பிரமுகர்கள் இஸ்ரேலுக்கு எதிரான தமது நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது பற்றி கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக பலஸ்தீனிய பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹவுத்திகள் பல மாதங்களாக செங்கடலில் செல்லும் கப்பல்களைத் தாக்கி வருகின்றனர்.
முக்கியமான சந்திப்பை
ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் ஆதாரங்களின்படி, இரண்டு பலஸ்தீனிய இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களும், பலஸ்தீன விடுதலைக்கான மார்க்சிஸ்ட் பொப்புலர் ஃப்ரண்டின் தலைவர்களும் கடந்த வாரம் ஹவுத்தி பிரதிநிதிகளுடன் "முக்கியமான சந்திப்பை" நடத்தினர்.
இதன்போது காசாவில் இடம்பெற்றுவரும் போரின் "அடுத்த கட்டத்திற்கு" "தங்கள் எதிர்ப்பின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான வழிமுறைகள்" பற்றி கலந்துரையாடியுள்ளனர், சந்திப்பு எங்கு நடந்தது என்பது இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடரும்
பலஸ்தீனிய குழுக்களும் ஹவுத்திகளும் தெற்கு காசாவின் ரஃபாவில் இஸ்ரேலிய தரைவழித் தாக்குதலைப் பற்றி பேசினர் என்று பெயர் குறிப்பிடாத வட்டாரங்கள் கூறுகின்றன.
ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் ஆதாரங்களின்படி, இஸ்ரேலின்"பலஸ்தீனிய எதிர்ப்பை ஆதரிப்பதற்காக" செங்கடல் வழியாக செல்லும் கப்பல்கள் மீதான தங்கள் தாக்குதல்கள் தொடரும் என்று ஹவுத்திகள் இந்த பேச்சின்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |