இஸ்ரேல் விமான தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய தளபதி பலி
லெபனான் (Lebanon) மீது இஸ்ரேல் (Israel) விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் ஆயுதக்குழு தளபதி உயிரிழந்தார்.
லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு அதிரடி தாக்குதல் நடத்தியது. தெற்கு லெபனானின் ஜொலியா என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவின் தளபதி
இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவின் தளபதி அபுதலிப் உயிரிழந்தார். அவருடன் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 150 வரையான ரொக்கெட் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இஸ்ரேலின் சில பகுதிகளில் தீ விபத்து சம்பவங்களும் ஏற்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா எச்சரிக்கை
மேலும், இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என்று ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், இஸ்ரேல் - லெபனான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இதேவேளை கடந்த ஒக்டோபர் 8, 2023 முதல் இஸ்ரேலியப் படைகளுடனான மோதல்களில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா போராளிகளின் எண்ணிக்கை 340 ஆக அதிகரிதுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |