துருக்கியில் சடலமாக மீட்கப்பட்ட ரஷ்யாவின் மூத்த தூதுவர்
ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் பான்-ஐரோப்பிய ஒத்துழைப்புத் துறையின் தலைவர் நிகோலாய் கோப்ரினெட்ஸ், துருக்கியில், இஸ்தான்புல், தக்சிம் மாவட்டத்தில் உள்ள அவரது விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த ரஷ்ய தூதுவர் இஸ்தான்புல்லிற்கு கூட்டம் ஒன்றிற்கு கலந்துகொள்வதற்காக வருகை தந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் அந்த கூட்டத்தை தவற விட்டமையால் ரஷ்ய அதிகாரிகள் அவர் தங்கி இருந்த விடுதிக்கு சென்று பார்த்த வேளை அவர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனை
விசாரணைகளின் ஆரம்ப அறிக்கைகள் கோப்ரினெட்ஸ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக கூறுகின்றன. எனினும் அவரது உயிரிழப்பிற்கான சரியான காரணத்தை அறிந்து கொள்வதற்காக அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதேவேளை, ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி சேவை கோப்ரினெட்ஸின் உயிரிழப்பை உறுதிப்படுத்தியதுடன், அதற்கான என்ன காரணம் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை அறியப்படவில்லை என தெரிவித்துள்ளது.