சர்வதேசத்தில் ராஜபக்சாக்களுக்கு கிடைத்த பெரும் தோல்வி (வாக்கெடுப்பு நகல் இணைப்பு)
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சட்ட ஆணைக்குழுவிற்கு முன்னாள் சட்டமா அதிபராக இருந்த மொஹான் பீரிஸை(Mohan Peiris) இலங்கை அரசாங்கம் பரிந்துரைத்திருத்த போதிலும் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர் படு தோல்வியை தழுவியுள்ளார்.
தற்போது நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக மொஹான் பீரிஸ் உள்ளார்.
ஆசிய - பசுபிக் பிராந்திய ஆணையத்தின் எட்டு இடங்களில் அவர் பதினொன்றிற்கு போட்டியிட்டார். ஆனால் போதுமான வாக்குகளைப் பெறவில்லை.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) அறிவித்த நவம்பர் 12ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.
போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய வெளிப்பாடுகளுக்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்குவதாக விமர்சிக்கப்பட்டுள்ள இலங்கை அரசாங்கத்திற்கு இது ஒரு கடுமையான தோல்வியாக பார்க்கப்படுகிறது.
ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கு இந்தியா, தாய்லாந்து, ஜப்பான், வியட்நாம், சீனா, கொரியா குடியரசு, சைப்ரஸ் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தப்பதவி 2023 ஜனவரி முதல் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
ஆறு மாதங்களுக்கு முன்னர், "இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் (ஜேடிஎஸ்) மற்றும் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச இயக்கம் (ஐடிஜேபி) ஆகியவை முன்னாள் பிரதம நீதியரசர் குறித்த பதவிக்கு நியமிக்கப்படக்கூடாது என்று கோரி சர்வதேச பிரசாரத்தை ஆரம்பித்தன.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் உறுப்பு நாடுகளுக்கு இவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று இரண்டு அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன. அவர் நாட்டின் சட்டமா அதிபராக இருந்த போது பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கொலைகள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை செய்த குற்றவாளிகளுக்கு தணடனை வழங்க தவறியதற்காக அவமானப்படுத்தப்பட்டவர் என்று குற்றம் சாட்டப்பட்ட. சட்ட அதிகாரி என அந்த அமைப்புகள் தெரிவித்திருந்தன."