07 மாவட்டங்களிலிருந்து உடனடியாக வெளியேற உத்தரவு
Sri Lankan Peoples
Landslide In Sri Lanka
Weather
By Sumithiran
தற்போதைய மோசமான வானிலை காரணமாக நிலச்சரிவு அபாயம் உள்ள 07 மாவட்டமக்களை உடனடியாக வெளியேறுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதால், உடனடியாக மக்களை வெளியேற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள்
தொடர்ச்சியான கனமழை காரணமாக நிலையற்ற சரிவுகள் ஏற்பட்டு, பல உயர் ஆபத்து மண்டலங்களில் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 7 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்