நாட்டில் இத்தனை ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு கொரோனாவா?
vaccine
corona
pregnant
By Sumithiran
இலங்கையில் இதுவரை 7 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக ஸ்ரீலங்காவின் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் 55 கர்ப்பிணி தாய்மார் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும் 90 வீதமான கர்ப்பிணி தாய்மார் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட நிலையில் ஏனையவர்களும் அதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என வைத்தியர் சித்ரமாலி டி சில்வா கேட்டுக்கொண்டார்.
இரண்டு கட்ட தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட எந்தவொரு கர்ப்பிணி தாயும் கொரோனாவினால் மரணிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.