பலமான முறைப்பாடு - அதனாலேயே சுசிலின் பதவி பறிப்பு- அமைச்சர் நாமல் தகவல்
Namal Rajapaksa
Gotabaya
Susil Premajayantha
By Sumithiran
இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த சுசில் பிரேமஜயந்தவின்(Susil Premajayantha) பதவியை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya)பறித்துள்ளார். இந்த நிலையில் அவரின் பதவி பறிப்பு தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) கருத்து தெரிவித்துள்ளார்.
சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக எழுந்துள்ள பல்வேறு ஒழுக்காற்று குற்றச்சாட்டுகள் காரணமாகவே அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமைச்சரவை, அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் பல ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை விமர்சித்ததற்காக அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஏனைய அமைச்சர்களின் முறைப்பாடுகளை அடுத்து அரசதலைவர், பிரேமஜயந்தவை பதவி நீக்கம் செய்ததாக அமைச்சர் நாமல் மேலும் தெரிவித்தார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி